Mensuration 3D – Aptitude Questions and Answers

Mensuration 3D (Volume) Questions and Answers

Topic Name Mensuration (அளவியல்) – 3D

  • கனசெவ்வகம் (Cuboid)
  • கனசதுரம் (Cube)
  • உருளை (Cylinder)
  • உள்ளீடற்ற உருளை (Hollow Cylinder)
  • கூம்பு (Cone)
  • கோளம் (Sphere)
  • உள்ளீடற்ற கோளம் (Hollow Sphere )
  • அரைக்கோளம் (Hemisphere)
  • உள்ளீடற்ற அரைக்கோளம் (Hollow Hemisphere)
  • கூம்பின் இடைக்கண்டம் (Frustum of cone)
No of Questions 25

Please enter your email:

1.

88 ச.செ.மீ வளைபரப்புடைய ஒரு நேர்வட்ட உருளையின் உயரம் 14 செ.மீ எனில், உருளையின் விட்டம் காண்க.
The curved surface area of a right circular cylinder of height 14 cm is 88 cm². Find the diameter of the cylinder.
 
 
 
 

2.  தடிமன் 2 மீ, உட்புற ஆரம் 6 மீ மற்றும் உயரம் 25 மீ உடைய ஓர் உருளை வடிவக் சுரங்கப்பாதையின் உள் மற்றும் வெளிப்புறப் பரப்புகளுக்கு வர்ணம் பூசப்படுகிறது, ஒரு லிட்டர் வர்ணத்தைக் கொண்டு 10 ச.மீ பூச முடியுமானால், சுரங்கப்பாதைக்கு வர்ணம் பூச எத்தனை லிட்டர் வர்ணம் தேவை?

If one litre of paint covers 10 m², how many litres of paint is required to paint the Internal and external surface areas of a cylindrical tunnel whose thickness is 2 m, internal radius is 6 m and height is 25 m.

 
 
 
 

3.

ஒரு கோளத்தின் புறப்பரப்பு 154 ச.மீ எனில், அதன் விட்டம் காண்க.

Find the diameter of a sphere whose surface area is 154 m².

 
 
 
 

4.

ஒரு திண்ம அரைக்கோளத்தின் அடிப்பரப்பு 1386 ச.மீ எனில், அதன் மொத்தப்புறப்பரப்பைக் காண்க.

If the base area of a hemispherical solid is 1386 sq. meters , then find its total surface area?

 
 
 
 

5.

 ஒரு கூம்பின் இடைக்கண்டச் சாயுயரம் 5 செ.மீ ஆகும். அதன் இரு ஆரங்கள் 4 செ.மீ மற்றும் 1 செ.மீ எனில், இடைக்கண்டத்தின் வளைபரப்பைக் காண்க.

The slant height of a frustum of a cone is 5 cm and the radius of its ends are 4 cm and 1 cm. Find its curved surface area.

 
 
 
 

6.

உயரம் 2 மீ மற்றும் அடிப்பரப்பு 250 ச.மீ கொண்ட ஓர் உருளையின் கன அளவைக் காண்க.

Find the volume of a cylinder whose height is 2 m and whose base area is 250 m².

 
 
 
 

7.

 45 செ.மீ உயரமுள்ள ஓர் இடைக்கண்டத்தின் இரு புற ஆரங்கள் முறையே 28 செ.மீ மற்றும் 7 செ.மீ எனில், இடைக்கண்டத்தின் கன அளவைக் காண்க.

If the radii of the circular ends of a frustum which is 45 cm high are 28 cm and 7 cm , find the volume of the frustum.

 
 
 
 

8.

களிமண் கொண்டு செய்யப்பட்ட 24 செ.மீ உயரமுள்ள ஒரு கூம்பை ஒரு குழந்தை அதே ஆரமுள்ள ஓர் உருளையாக மாற்றுகிறது எனில் உருளையின் உயரம் காண்க.

A cone of height 24 cm is made up of modeling clay . A child reshapes it in the form of a cylinder of same radius as cone . Find the height of the cylinder.

 
 
 
 

9.

சாயுயரம் 19 மீ கொண்ட கூம்பு வடிவக் கூடாரத்தில் நால்வர் உள்ளனர். ஒருவருக்கு 22 ச.மீ பரப்பு தேவை எனில், கூடாரத்தின் உயரத்தைக் கணக்கிடவும்.

4 persons live in a conical tent whose slant height is 19 m. If each person require 22 m² of the floor area , then find the height of the tent.

 
 
 
 

10.

484 செ.மீ சுற்றளவுள்ள ஒரு மரக்கூம்பின் உயரம் 105 செ.மீ எனில், கூம்பின் கன அளவைக் காண்க.

If the circumference of a conical wooden piece is 484 cm then find its volume when its height is 105 cm.

 
 
 
 

11.

ஓர் உள்ளீடற்ற தாமிரக் கோளத்தின் வெளிப்புற, உட்புறப் புறப்பரப்புகள் முறையே 576Π ச.செ.மீ மற்றும் 324Π ச.செ.மீ எனில்,  கோளத்தை உருவாக்கத் தேவையான தாமிரத்தின் கனஅளவைக் காண்க.

The outer and the inner surface areas of a spherical copper shell are 576Π cm² and 324Π cm² respectively. Find the volume of the material required to make the shell.

 
 
 
 

12.

உயரம் 2.4 செ.மீ மற்றும் விட்டம் 1.4 செ.மீ கொண்ட ஒரு திண்ம உருளையில் இருந்து அதே விட்டமும் உயரமும் உள்ள ஒரு கூம்பு வெட்டி எடுக்கப்பட்டால் மீதமுள்ள திண்மத்தின் கனஅளவு எவ்வளவு கன செ.மீ ஆகும்?

From a solid cylinder whose height is 2.4 cm and the diameter 1.4 cm, a cone of the same height and same diameter is carved out , Find the volume of the remaining solid to the nearest cm³.

 
 
 
 

13.

ஓர் உள்ளீடற்ற அரைக்கோள ஓட்டின் உட்புற மற்றும் வெளிப்புற விட்டங்கள் முறையே 6 செ.மீ மற்றும் 10 செ.மீ ஆகும். அது உருக்கப்பட்டு 14 செ.மீ விட்டமுள்ள ஒரு திண்ம உருளையாக்கப்பட்டால் , அவ்வுருளையின் உயரம் காண்க.

The internal and external diameter of a hollow hemispherical shell are 6 cm and 10 cm respectively. If it is melted and recast into a solid cylinder of diameter 14 cm , then find the height of the cylinder.

 
 
 
 

14.

12 செ.மீ ஆரமுள்ள ஓர் அலுமினியக் கோளம் உருக்கப்பட்டு 8 செ.மீ ஆரமுள்ள ஓர்உருளையாகமாற்றப்படுகிறது. உருளையின் உயரம் காண்க.

An aluminium sphere of radius 12 cm is melted to make a cylinder of radius 8 cm. Find the height of the cylinder.

 
 
 
 

15.

16 செ.மீ உயரமுள்ள ஒரு நேர்வட்டக் கூம்பின் இடைக்கண்ட ஆரங்கள் 8 செ.மீ மற்றும் 20 செ.மீ எனில், அதன் கன அளவு

A frustum of a right circular cone is of height 16cm with radii of its ends as 8 cm and 20 cm . Then , the volume of the frustum is

 
 
 
 

16.

ஒரு கூம்பின் அடிப்புற ஆரம் மும்மடங்காகவும் உயரம் இரு மடங்காகவும் மாறினால் கனஅளவு எத்தனை மடங்காக மாறும்?

If the radius of the base of a cone is tripled and the height is doubled then the volume is

 
 
 
 

17.

ஓர் உருளையின் ஆரம் அதன் உயரத்தில் மூன்றில் ஒரு பங்கு எனில், அதன் மொத்தப்புறப்பரப்பு

The total surface area of a cylinder whose radius is \frac{1}{3} of its height is

 
 
 
 

18.

ஓர் அறையின் நீளம் , அகலம் மற்றும் உயரம் முறையே 25 மீ , 15 மீ மற்றும் 5 மீ ஆகும். அறையின் தரை மற்றும் நான்கு சுவர்களையும் புதுப்பிக்க 1 சதுர மீட்டருக்கு Rs.80 வீதம் ஆகும் எனில், மொத்தச் செலவைக் காண்க.

The length , breadth and height of a hall are 25m, 15 m and 5 m respectively . Find the cost of renovating its floor and four walls at the rate of ₹ 80 per m²

 
 
 
 

19.

5 செ.மீ பக்க அளவு கொண்ட கனச்சதுரத்தின் மொத்தப்பரப்பு மற்றும் பக்கப்பரப்பைக் காண்க.

Find the Total Surface Area and Lateral Surface Area of the cube, whose side is 5 cm.

 
 
 
 

20.

ஒரு கனச்சதுரத்தின் மொத்தப்பரப்பு 2400 செ.மீ² எனில், அதன் பக்கப்பரப்பைக் காண்க.

If the total surface area of a cube is 2400 cm² then, find its lateral surface area.

 
 
 
 

21.

ஒரு கனச்செவ்வகத்தின் நீளம், அகலம் மற்றும் உயரத்தின் விகிதம் 7: 5: 2 என்க. அதன் கன அளவு 35840 செ.மீ ³எனில் அதன் பக்க அளவுகளைக் காண்க.

The length, breadth and height of a cuboid are in the ratio 7: 5: 2. its volume is 35840 cm³. Find its dimensions.

 

 
 
 
 

22.

10 செ.மீ பக்க அளவுள்ள கனச்சதுரத்தின் கன அளவைக் காண்க.

Find the volume of cube whose side is 10 cm.

 

 
 
 
 

23.

ஒரு குளத்தின் நீளம் , அகலம் மற்றும் ஆழம் முறையே 20.5 மீ. 16 மீ மற்றும் 8 மீ எனில், அந்தக் குளத்தின் கொள்ளளவை லிட்டரில் காண்க.

The length, breadth and depth of a pond are 20.5 m, 16 m and 8 m respectively. Find the capacity of the pond in litres.

 
 
 
 

24.

ஒரு கனச்செவ்வகத்தின் கன அளவு 1800 செ.மீ³ அதன் நீளம் 15 செ.மீ மற்றும் உயரம் 12 செ.மீ எனில் அதன் அகலத்தைக் காண்க.

The volume of a cuboid is 1800 cm³. if its length is 15 cm and height 12 cm, then find the breadth of the cuboid.

 
 
 
 

25.

ஒரு கனச்சதுரத்தின் மொத்தப்பரப்பு 726 செ.மீ² எனில் அதன் கன அளவைக் காண்க.

If the total surface area of a cube is 726 cm², then find its volume.

 
 
 
 

Naga Notes YouTube Channel
  Telegram Group 

Leave a Comment