Age, Statistics, Profit and Loss – Aptitude Questions and Answers

Age, Statistics, Profit and Loss Questions and Answers

Topic Name
  • Age (வயது கணக்குகள்)
  • Statistics (புள்ளியல்)
  • Profit and Loss (லாபம் & நட்டம்)
No of Questions 40

Please enter your email:

1. Arithmetic mean of the values 9, 6, 7, 8, 5 and x is 8, then the value of x is.

9 ,6 , 7 , 8 , 5 மற்றும் x ஆகியவற்றின் கூட்டு சராசரி 8 எனில் x ன் மதிப்பு

 
 
 
 

2. By selling 5 articles, a man gains the C.P of 1 article, his gain percentage is

5 பொருள்களை விற்பதால் ஒரு நபருக்கு ஒரு பொருளின் அடக்க விலை ஆனது லாபமாகக் கிடைக்கிறது எனில் லாப சதவீதம்

 
 
 
 

3. Find the mean and variance of first 10 natural numbers
முதல் 10 இயல் எண்களின் சராசரி மற்றும் விலக்க வர்க்க சராசரி காண்க

 
 
 
 

4. The cost price of 25 wrist watches is equal to the selling price of 20 wrist watches. Find the loss or gain percent.

25 கைக்கடிகாரத்தின் அடக்க விலை 20 கைக்கடிகாரங்களின் விற்ற விலைக்கு சமம் எனில் லாபம் அல்லது நட்டம் சதவீதத்தை காண்க

 
 
 
 

5. Arun buys a colour T.V set for ₹ 15,000 and sells it at a loss of 15% what is the selling price of the T.V. set.
அருண் ஒரு வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டியை ₹ 15,000 வாங்கி அதனை 15 % நட்டத்திற்கு விற்றார் எனில் அத்தொலைக்காட்சிப் பெட்டியின் விற்பனை விலை யாது?

 
 
 
 

6. A man buys 10 articles for Rs. 8 and sells them at the rate of Rs. 1.25 per article. His gain is

ஒரு மனிதன் 10 புதினங்கள் ரூ. 8க்கு வாங்கி அவற்றை ரூ. 1.25 வீதம் 10 புதினங்களை விற்றார் அவருடைய லாபம்

 
 
 
 

7. If the coefficient of variation of a collection of data is 18 and its standard deviation is 3.42, then find the mean.
ஒரு புள்ளி விவரத்தின் மாறுபாட்டுக்கு கெழு 18 மற்றும் திட்ட விலக்கம் 3.42 எனில் அதன் கூட்டு சராசரி காண்க.

 
 
 
 

8. If the standard deviation of a set of data is 1.6, then the variance is

ஒரு புள்ளி விவரத்தின் திட்ட விலக்கம் 1.6 எனில் அதன் விலக்க வர்க்க சராசரி

 
 
 
 

9. The marks scored by a set of students in a test are 65, 97, 78, 49, 23, 48, 59, 98. The range for this data is

மாணவர்கள் தேர்வில் வாங்கிய மதிப்பெண்கள் 65, 97, 78, 49, 23, 48, 59, 98 எனில் விவரங்களின் வீச்சு.

 
 
 
 

10. A fruit seller bought 8 boxes of grapes at Rs. 150 each. One box was damaged. He sold the remaining boxes at Rs. 190 each. Find the profit / loss percentage.

ஒரு பழ வியாபாரி 8 பெட்டி, திராட்சைகளை ஒரு பெட்டி ரூ.150 வீதம் வாங்கினார். அதில் ஒரு பெட்டி திராட்சை அழுகி விடுகிறது. மீதமுள்ள பெட்டிகளை ஒரு பெட்டி ரூ. 190 என்ற விலைக்கு விற்கிறார். லாப/ நட்ட சதவீதம் காண்க.

 
 
 
 

11. What is the Median of the following? 3 , 4 , 5 , 3 , 6 , 7 , 2
கீழ்கண் ட விவரங்களுக்கு இடைநிலை காண் . 3 , 4 , 5 , 3 , 6 , 7 , 2

 
 
 
 

12. A dealer allows a discount of 20% and still gains 10%. What is the cost price of the book which is marked at Rs. 440?

ஒரு புத்தகத்தின் விலையில் 20% தள்ளுபடி செய்தாலும் ஒரு வியாபாரிக்கு 10% லாபம் கிடைக்கிறது. புத்தகத்தின் குறித்த விலை ரூ. 440 எனில் அதன் அடக்க விலை யாது ?

 
 
 
 

13. The ratio of the ages of son and his father in 2015 and 2023 are 1:4 and 3:8 respectively. Find the sum of the ages of son and father in 2010

2015 மற்றும் 2023 இல் ஒரு மகன் மற்றும் தந்தையின் வயது விகிதம் முறையே 1:4 மற்றும் 3:8 எனில் 2010ல் மகன் மற்றும் தந்தையின் வயதுகளில் கூடுதல் யாது?

 
 
 
 

14. Find the mean of the following: 10, 20, 30, 40, 50

கீழ்காண்பவைகளின் சராசரி காண்க 10, 20, 30, 40, 50

 
 
 
 

15. The standard deviation of 10 values is 3. If each value in increase by 4. Find the variance of the new set of value.

10 மதிப்புகளில் திட்டவிலக்கம் 3. ஒவ்வொரு மதிப்புடனும் 4 கூட்ட கிடைக்கும் புதிய திட்டம் விலக்கத்தின் விலக்க வர்க்க சராசரி யாது?

 
 
 
 

16. Find the mean of 2, 4, 6, 8, 10, 12, 14, 16.

கூட்டு சராசரி காணவும் 2, 4, 6, 8, 10, 12, 14, 16.

 
 
 
 

17. Find the median of the data. 12, 14, 25, 23, 18, 17, 24, 20

12, 14, 25, 23, 18, 17, 24, 20 என்ற விவரங்களின் இடைநிலை காண்க

 
 
 
 

18. Pocket money received by 7 students is given below. ₹ 42, ₹ 22, ₹ 40, ₹ 26, ₹ 23, ₹28, ₹ 43 Find the median.

ஏழு மாணவர்கள் தின செலவிற்காக வாங்கிய பணம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. ₹ 42, ₹ 22, ₹ 40, ₹ 26, ₹ 23, ₹28, ₹ 43 இவற்றின் இடைநிலை காண்க.

 
 
 
 

19. A man bought an old bicycle for ₹ 1,250. He spent ₹ 250 on its repairs. He then sold it for ₹ 1,400. Find his loss percentage.

ஒரு நபர் ஒரு பழைய மிதிவண்டியை ரூ.1,250 க்கு வாங்கினார். அதனை சீர்படுத்த ரூ.250 செலவு செய்தார். அவர் அதனை ரூ. 1400 க்கு விற்றார். அவரின் நட்ட சதவீதத்தை காண்க

 
 
 
 

20. The standard deviation of 10 observation is 4\sqrt{2}. If each observation is multiplied by 3. Find” the new standard deviation.

10 புள்ளி விவரங்களில் திட்ட விலக்கம் 4\sqrt{2} . அப்புள்ளி விவரத்தின் மதிப்புகளை ஒவ்வொன்றையும் 3 ஆல் பெருக்க கிடைக்கும் புதிய திட்ட விலக்கம் யாது?

 
 
 
 

21. Find the standard deviation of 40, 42 and 48. If each value is multiplied by 3, find the standard deviation of the new data.

40, 42 ,48 எனும் இப்புள்ளி விவரத்திற்கு திட்டவிலக்கம் காண்க ஒவ்வொரு மதிப்பும் மூன்றால் பெருக்கப்படும் போது கிடைக்கும் புதிய மதிப்புகளுக்கான திட்ட விலக்கம் காண்க.

 
 
 
 

22. The market price of new brand watch is 15% higher than its original price. Due to increase in demand. the price is further increased by 10%. How much profit will be obtained in selling the watch? (in %)

ஒரு புதிய கடிகாரத்தின் விற்பனை விலை அதன் உண்மை விலையை விட 15 % அதிகம் ,மேலும் அதன் தேவையைப் பொறுத்து மீண்டும் 10 % அதிக விலை ஏற்றம் செய்யப்பட்டால் , அந்தகடிகாரத்தை விற்கும் போது கிடைக்கும் மொத்த லாபம் எவ்வளவு சதவீதம்?

 
 
 
 

23. Even after giving a discount of 20% the shop owner gets a profit of 10%, If the marked price is Rs.2,200 then the cost price is

20% தள்ளுபடிக்கு பின்னரும் வியாபாரிக்கு 10% லாபம் கிடைக்கிறது. குறித்த விலை Rs.2,200எனில் அடக்க விலை என்ன?

 
 
 
 

24. By selling a car for Rs. 2,00,000, a man suffered a loss of 20% the cost price of the car is

ரூபாய் 2,00,000  க்கு ஒரு காரை விற்பனை செய்ததில் ஒருவர் 20% நஷ்டம் அடைந்தார் அவர் கார் வாங்கிய விலையானது

 
 
 
 

25. Sara baked cakes for the school festival. The cost of one cake was Ra. 55. She sold 25 cakes and made a profit of Rs. 11 on each cake. Find the selling price of the cakes.

ஒரு பள்ளியின் விழாவிற்காக சாரா கேக் செய்தால். ஒரு கேக்கின் அடக்க விலை ரூபாய் 55 ஆகும். அவள் ஒவ்வொரு கேக்கையும் ரூபாய் 11 லாபத்திற்கு விற்கிறாள். 25 கேக்குகளை விற்றிருந்தால் விற்பனை விலையை காண்க.

 
 
 
 

26. At present, the ratio between the ages of Arun and Deepak is 4:3, After 6 years, Arun’s age will be 26 yeara. What is the age of Deepak at present?

தற்போது அருண் மற்றும் தீபக் ஆகியோரின் வயதுகளின் விகிதம் 4: 3 . 6 வருடங்களுக்கு பிறகு அருணின் வயது 26. தற்போது தீபக்கின் வயது என்ன?

 
 
 
 

27. The age of a man is 4 times the sum of the ages of his two sons. Ten years hence, his age will be double of the sum of the ages of his sons. The father’s present age is

ஒருவரின் தற்போதைய வயது அவரின் இரு மகள்களின் வயதுகளின் கூட்டுத் தொகையை போல் 4 மடங்கு உள்ளது 10 வருடங்களுக்கு பிறகு அவரின் வயது இரு மகள்களின் வயதுகளில் கூட்டு தொகையை போல் இரண்டு மடங்கு ஆகும்  எனில் அவரின் தற்போதைய வயது

 
 
 
 

28. The sum of the present ages of a father and his son is 60 years. Six years ago, father’s age was five times the age of the son. After 6 years, what is the son’s age?

இரு கைக்கடிகாரங்கள் ஒவ்வொன்றையும் 594 ரூபாய்க்கு ஒருவர் விற்றார். இவ்வாறு விற்றதில் ஒன்றில் 10% லாபமும் மற்றதில் 10% நட்டமும் அவருக்கு ஏற்பட்டது. மொத்தத்தில் அவருக்கு ஏற்பட்ட லாபம் அல்லது நட்ட சதவீதத்தை காணவும்.

 
 
 
 

29. A man sells two wrist watches at 594 each. On one he gains 10% and on the other he loses 10%. Find his gain or loss percent. On the whole

தந்தை மற்றும் மகனின் தற்போதைய வயதுகளின் கூடுதல் 60 வருடங்கள். 6 வருடங்களுக்கு முன்பு தந்தையின் வயது மகனின் வயதைப் போல் 5 மடங்கு எனில் 6 வருடங்களுக்குப் பிறகு மகனின் வயது என்ன?

 
 
 
 

30. Find  Mode 5,5,5,5,5,1,2,2,3,3,3,4,4,4,4

5,5,5,5,5,1,2,2,3,3,3,4,4,4,4 என்ற விவரங்களில் முகடு காண்க

 
 
 
 

31. Find Median 14,12,1,9,11

14,12,1,9,11 என்ற விவரங்களில் இடை நிலையை காண்க

 
 
 
 

32. The list price of a frock is Rs. 220. A discount of 20% on sales is announced. What is the amount of discount on it and its selling price?

ஒரு உடையின் பட்டியல் விலை 220 ரூபாய். அதன் விற்பனையில் 20% தள்ளுபடி என்று அறிவிக்கப்பட்டுள்ளது . உடையின் மேல் தள்ளுபடி எவ்வளவு? அதன் விற்பனை விலை என்ன ?

 
 
 
 

33. The present ages of Reena and Usha are 24 years and 36 years respectively what was the ratio between the ages of Usha and Reena, 8 years ago?

ரீனா மற்றும் உஷாவின் தற்போதைய வயது முறையே 24 வருடங்கள் மற்றும் 36 வருடங்கள் எனில் 8 ஆண்டுகளுக்கு முன்பு உஷா மற்றும் ரீனாவின் வயதுகளின் விகிதம் என்னவாக இருந்திருக்கும்?

 
 
 
 

34. A group of 100 candidates have their average height 163.8 cm with coefficient of variation 3.2. What is the standard deviation of their heights?

ஒரு குழுவில் 100 பேர் உள்ளனர். அவர்களின் உயரங்களின் கூட்டுச்சராசரி 163.8 cm மற்றும் மாறுபாட்டு கெழு 3.2 எனில் அவர்களுடைய உயரங்களில் திட்ட விலக்கத்தை காண்க.

 
 
 
 

35. Find the Range of first 20 natural numbers

முதல் 20 இயல் எண்களின் வீச்சு

 
 
 
 

36. A fruit seller bought 12 boxes of grapes at Rs. 160 each. Two boxes were damaged. He sold the remaining boxes at Rs. 200 each then profit per cent is

ஒரு பழ வியாபாரி 12 பெட்டி திராட்சைகளை ஒரு பெட்டி ரூபாய் 160 என்ற வீதம் வாங்கினார். அதில் இரண்டு பெட்டிகள் அழுகி விடுகிறது. மீதமுள்ள பெட்டிகளை ஒரு பெட்டிக்கு ரூபாய் 200 வீதம் விலைக்கு விற்கிறார் எனில் லாப சதவீதம்.

 
 
 
 

37. A dealer bought a television set for a Rs. 10,000 and sold it for Rs. 12,000. Find the

profit/loss made by him for one television set.

ஒரு மொத்த வியாபாரி ஒரு தொலைக்காட்சி பெட்டியே ரூபாய் 10,000க்கு வாங்கி ரூபாய் 12,000க்கு விற்கிறார். ஒரு பெட்டியின் லாபம் நாட்டத்தைக் காண்க.

 
 
 
 

38. A trader buys an article for Rs. 1,200 and marks it 30% above the cost price. He then sells it after allowing a discount of 20%. Find the selling price and profit percent.

ஒரு வியாபாரி ஒரு பொருளை ரூபாய் 1200 க்கு வாங்கினார். பின்பு அதன் அடக்க விலைக்கு மேல் 30 சதவீதம் உயர்த்தி குறித்த விலை ஆக்கினார். இதற்கு 20% தள்ளுபடி கொடுத்து விற்றார் எனில் விற்பனை விலை மற்றும் லாப சதவீதம் காண்க.

 
 
 
 

39. A shopkeeper allows a discount of 10% to his customers and still gains 20%. Find the marked price of an article which costs Rs. 450 to the shopkeeper.

ஒரு கடைக்காரர் தன் வாடிக்கையாளர்களுக்கு 10% தள்ளுபடி தந்தும் 20% லாபம் அடைகின்றார் .ஒரு பொருளின் உண்மை விலை ரூபாய் 450 எனில் பொருளின் குறித்த விலையை காண்க.

 
 
 
 

40. Washing machine was sold at Rs. 15,000 after giving successive discounts of 15% and 25% respectively. What was the marked price?

தொடர் தள்ளுபடிகள் முறையே 15% மற்றும் 25% என்றவாறு தரப்பட்டு ஒரு சலவை இயந்திரம் ரூபாய் 15000க்கு விற்கப்பட்டது எனில் அதன் குறித்த விலை என்ன?

 
 
 
 

 

YouTube Channel Click here
Telegram Group Join Now

Leave a Comment