சர்வதேச மகளிர் தினம் 2023 (International Women's Day)Wed, Mar 8, 2023
ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8ஆம் தேதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது.
இந்நாளைக் கொண்டாடுவதற்கான முக்கிய நோக்கம் சமுதாயத்தில் பெண்களுக்கு சம உரிமை வழங்குவது
மகளிர் தினம் ஏன் கொண்டாடப்படுகிறது?அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நெசவுத் தொழிலில் பெருமளவு பெண்கள் ஈடுபட்டிருந்தனர்.இவர்களுக்கு பதினாறு மணிநேரம் வேலை வழங்கி மிகக் குறைவான ஊதியத்தை வழங்கினார்.
இதனை எதிர்க்கும் வகையில் 1908இல் பெண்கள் அனைவரும் கூடி நியூயார்க் நகரத்தின் வழியாக குறுகிய வேலை நேரம், சிறந்த ஊதியம் மற்றும் வாக்களிக்கும் உரிமை ஆகியவற்றைக் கோரி குரல் எழுப்பினர்
கருப்பொருள்
2023 ஆம் ஆண்டு சர்வதேச மகளிர் தினத்திற்கான கருப்பொருள் அனைவருக்கும் டிஜிட்டல் :
”பாலின சமத்துவத்திற்கான புத்தகங்கள் மற்றும் தொழில்நுட்பம்"
முதன் முதலாக 1909ஆம் ஆண்டு பிப்ரவரி 28ஆம் தேதி, அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அமெரிக்க சோஷியலிச கட்சி சார்பில் தேசிய மகளிர் தினம் கொண்டாடப்பட்டது.
இந்த நாளை சர்வதேசமயமாக்க வேண்டும் என்று கம்யூனிஸ்ட் ஆர்வலர் மற்றும் பெண்கள் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் கிளாரா ஜெட்கின் கூறினார்
இதனால் ஐ.நா. பெண்கள் அமைப்பு மார்ச் 8 ஆம் சர்வதேச மகளிர் தினமாக கொண்டாட முடிவெடுத்தது