Ratio & Proportion, Profit and Loss, Percentage, Simple Interest Problems with Answers

School Book Maths

3 Star Lesson

Test Lessons 6 Term 1 – விகிதம் & விகிதசமம் (Ratio & Proportion)

6 Term 2 – பட்டியல், லாபம் & நட்டம் (Bill, Profit & Loss)

7 Term 3 – சதவீதமும் தனிவட்டியும் (Percentage & Simple Interest)

No of Questions 40

Please enter your email:

1. 500 கி இக்கும் 250 கி இக்கும் உள்ள விகிதத்தை எளிய வடிவில் காண்க .

Find the ratio of 500 g to 250 g.

 
 
 
 

2. 40 நிமிடத்திற்கும் 1 மணி நேரத்திற்கும் இடையே உள்ள விகிதத்தைக் காண்க .

What is the ratio of 40 minutes to 1 hour ?

 
 
 
 

3. ஒரு சன்னலின் நீள அகலங்கள் முறையே 1 மீ மற்றும் 70 செமீ எனில் நீளத்திற்கும் அகலத்திற்கும் உள்ள விகிதம்______.

The length and breadth of a window are in 1m and 70 cm respectively. The ratio of The length to the breadth is_____.

 
 
 
 

4. அழகனின் வயது 50 மற்றும் அவரது மகனின் வயது 10 எனில் அழகன் மற்றும் அவரது மகனின் வயதுக்கான விகிதத்தின் எளிய வடிவம்

If Azhagan is 50 years old and his son is 10 years old then the simplest ratio between The age of Azhagan to his son is

 
 
 
 

5. குமரனிடம் Rs.600 உள்ளது. அதனை விமலா மற்றும் யாழினிக்கு இடையில் 2 : 3 என்ற விகிதத்தில் பகிர்ந்தளிக்கிறார். இருவரில் யாருக்கு அதிகமாகக் கிடைக்கும் ? எவ்வளவு ?

Kumaran has Rs.600 and wants to divide it between Vimala and Yazhini in the Ratio 2 : 3. Who will get more and how much ?

 
 
 
 

6. Rs.1600 ஐ A மற்றும் B என்ற இரு நபர்களுக்கு 3 : 5 என்ற விகிதத்தில் பிரித்துக்கொடுத்தால், B இக்குக் கிடைக்கும் தொகை என்ன ?

If Rs.1600 is divided among A and B in the ratio 3 : 5 then, B’s share is

 
 
 
 

7. 2 , 5 , x , 20 ஆகிய எண்களை அதே வரிசையில் பயன்படுத்தி அமையும் விகிதங்கள் விகித சமமாக இருப்பின், ‘ x ‘ = ?

if the ratios formed using the numbers 2 , 5 , x , 20 in the same order are in proportion, Then ‘ x ‘ is

 
 
 
 

8. 7 : 5 ஆனது x : 25 இக்கு விகிதச்சமம் எனில், ‘ x ‘ இன் மதிப்பு காண்க.

If 7 : 5 is in proportion to x : 25, then ‘ x ‘ is

 
 
 
 

9. நாற்காலிகளின் விலை Rs.7500. இதுபோன்று Rs.12,000 க்கு எத்தனை நாற்காலிகள் வாங்க இயலும் எனக் காண்க .

The cost of 15 chairs is Rs.7500. Find the number of such chairs that can be purchased For Rs.12,000 ?

 
 
 
 

10. சோழன் சீரான வேகத்தில் நடந்து 6 கி.மீ தொலைவை 1 மணி நேரத்தில் கடக்கிறார். அதே வேகத்தில் அவர் 20 நிமிடங்களில் நடந்து கடக்கும் தொலைவு எவ்வளவு ?

Cholan walks 6 km in 1 hour at constant speed. Find the distance covered by him in 20 minutes at the same speed.

 
 
 
 

11. பின்னம் \frac{23}{30} ஐச் சதவீதமாக மாற்றுக .

Convert the fraction  \frac{23}{30} as percent .

 
 
 
 

12. ஒரு பள்ளியில் 560 மாணவர்கள் உள்ளனர். அதில் 320 பேர் சிறுவர்கள் எனில், அந்தப் பள்ளியிலுள்ள சிறுமிகளின் சதவீதத்தைக் கண்டறியவும்.

There are 560 students in a school. Out of 560 students, 320 are boys. Find the percentage of girls in that school.

 
 
 
 

13. ஒரு தேர்தலில் வேட்பாளர் ஒருவர் பெற்ற வாக்குகளின் சதவீதம் 48 % ஆகும் . அவர் பெற்ற வாக்குகளைப் பின்னமாக வெளிப்படுத்துக .

In an election , Candidate X secured 48 % of votes . What fraction will represent his votes ?

 
 
 
 

14. தென்றல் தனது வருமானத்தில் 4 இல் ஒரு பங்கைச் சேமித்தால் அதன் சதவீதத்தைக் காண்க.

Thendral saved one fourth of her salary. Her savings percentage is

 
 
 
 

15. 0.07 % என்பது

Is 0.07 %

 
 
 
 

16. மலர் 25 மீட்டர் துணிச் சுற்றலிருந்து 1.75 மீட்டர் துணியை வாங்கினார் எனில் , மலர் வாங்கிய துணியின் அளவைச் சதவீதத்தில் கூறுக .

Malar bought 1.75 m of fabric from a roll of 25 m . Express the fabric bought in terms of percentage ?

 
 
 
 

17. ஒரு வகுப்பில் 50 மாணவர்கள் உள்ளனர் . ஒரு குறிப்பிட்ட நாளில் 14 % பேர் வருகை புரியவில்லை எனில் , வருகை புரிந்த மாணவர்களின் எண்ணிக்கையைக் கண்டறியவும் .

There are 50 students in a class . If 14 % are absent on a particular day , find the number of students present in the class .

 
 
 
 

18. ஒரு நகரத்தில் கல்வியறிவு பெற்றவர்களின் எண்ணிக்கை 5 ஆண்டுகளில் 5 இலட்சத்திலிருந்து 8 இலட்சமாக அதிகரித்தது எனில் , அதிகரிப்பின் சதவீதம் என்ன ?

The number of literate persons in a city increased from 5 lakhs to 8 lakhs in 5 years . What is the percentage of increase ?

 
 
 
 

19. ஒரு பொருளை Rs.200 ரூபாய்க்கு விற்பதனால் 4% நட்டம் ஏற்படுகிறது எனில், அப்பொருளின் அடக்கவிலை என்ன?

An item was sold at Rs.200 at a loss of 4 %. What is its cost price.

 
 
 
 

20.

ராமு என்பவர் ஆங்கிலப் பாடத்தில் 25 இக்கு 20 மதிப்பெண்களும், அறிவியல் பாடத்தில் 40 இக்கு 30 மதிப்பெண்களும், கணிதப் பாடத்தில் 80 இக்கு 68 மதிப்பெண்களும் பெற்றார் எனில், அவர் எந்தப் பாடத்தில் சிறந்த சதவீதம் பெற்றுள்ளார் ?

Ramu scored 20 out of 25 marks in English , 30 out of 40 marks in Science and 68 out of 80 marks in mathematics . In which subject his percentage of marks is best ?

 
 
 
 

21. Rs.25,000 இக்கு 8 % வட்டி வீதம் 3 ஆண்டுகளுக்குத் தனிவட்டி காண்க .

Find the simple interest on  Rs.25,000 at 8 % per annum for 3 years ?

 
 
 
 

22. எத்தனை ஆண்டுகளில் ₹ 5,600 ஆண்டுக்கு 6 % தனிவட்டி வீதத்தில் ₹ 6,720 ஆக உயரும் .

In what time will ₹ 5,600 amount to ₹ 6,720 at 6 % per annum ?

 
 
 
 

23.

அசல் Rs.46,000 ஐ 1 ஆண்டு 9 மாதக் காலத்திற்குப் பிறகு தனிவட்டி மூலம் மொத்தத் தொகையாக Rs.52,440 ஆக உயர்ந்தது எனில் , வட்டி வீதத்தைக் காண்க .

A sum of Rs.46,000 was lent out at simple interest and at the end of 1 year and 9 months , the total amount was Rs.52,440 . Find the rate of interest per year .

 
 
 
 

24. ஓர் அசல் ஆண்டுக்கு 10 % வட்டி வீதத்தில் 5 ஆண்டுகளில் Rs.10,050 ஆக உயர்ந்தது எனில் , அசலைக் காண்க .

A principal becomest Rs.10,050 at the rate of 10 % in 5 years . Find the principal

 
 
 
 

25. அரவிந்த் என்பவர் ₹8000 ஐ ஆகாஷ் என்பவரிடமிருந்து ஆண்டுக்கு 7 % தனிவட்டி வீதம் கடனாகப் பெற்றார். இரண்டு ஆண்டுகளின் முடிவில் அரவிந்த் செலுத்த வேண்டிய தனிவட்டியையும் மொத்தத் தொகையையும் காண்க.

Aravind borrowed a sum of ₹ 8,000 from Akash at 7 % per annum. Find the interest and amount to be paid at the end of two years.

 
 
 
 

26. பாட்ஷா என்பவர் ஒரு வங்கியிலிருந்து ஒரு குறிப்பிட்ட தனிவட்டி வீதத்தில் ₹ 8,500 ஐக் கடனாகப் பெற்றார் . மூன்று ஆண்டுகள் கழித்து அவர்₹ 11,050 ஐச் செலுத்திக் கடனை அடைத்தார் எனில் வட்டி வீதம் எவ்வளவு ?

Basha borrowed ₹ 8,500 from a bank at a particular rate of simple interest . After 3 years , he paid ₹ 11,050 to settle his debt . At what rate of interest he borrowed the money ?

 
 
 
 

27. பின்வருவனவற்றில் எது ₹ 1,000 அசலுக்காக ஓராண்டுக்கு 10 % என்ற வீதத்தில் தனிவட்டியாகும் .

which among the following is the simple interest for the principle of ₹ 1,000 for one year at the rate of 10 % interest per annum ?

 
 
 
 

28.

ஒரு கிராமத்தின் மக்கள்தொகை 8000. இவர்களில் 80 % பேர் கல்வியறிவு பெற்றவர்கள் . அதில் 40 % பெண்கள் எனில் ,கல்வியறிவு பெற்ற பெண்களின் எண்ணிக்கைக்கும் மொத்த மக்கள்தொகைக்கும் உள்ள சதவீதத்தைக் காண்க .

The population of a village is 8000. Out of these , 80 % are literate and of these literate people , 40 % are women . Find the percentage of literate women to the total population ?

 
 
 
 

29. ஓர் இயந்திரத்தின் தற்போதைய மதிப்பு ₹ 1,62,000 . ஒவ்வொரு ஆண்டுக்கும் இவ்வியந்திரத்தின் மதிப்பு 10 % குறைகிறது எனில் , இரண்டு ஆண்டுகள் கழித்து அவ்வியந்திரத்தின் மதிப்பு என்ன ?

The value of a machine depreciates at 10 % per year . If the present value is ₹ 1,62,000 , what is the worth of the machine after two years

 
 
 
 

30. ஓர் அசலானது 4 ஆண்டுகளில் இரண்டு மடங்காகிறது எனில் , வட்டி வீதத்தைக் காண்க . ( அசல் P = Rs. 100 என வைக்க வேண்டும் )

If a principal is getting doubled after 4 years , then calculate the rate of interest . ( Hint : Let P = Rs.100 )

 
 
 
 

31. ஒரு பழ வணிகர் ஒரு கூடைப் பழங்களைRs.1500 க்கு வாங்கினார். எடுத்து வரும்போது சில பழங்கள் நசுங்கிவிட்டன. மீதம் உள்ள பழங்களை Rs.480 க்கு அவரால் விற்பனை செய்ய முடிந்தது எனில் அவருடைய இலாடம் அல்லது நட்டம் காண்க.

A frult seller bought a basket of fruits for Rs . 500. During the transit some fruits Were damaged . So , he was able to sell the remaining fruits for Rs . 480. Find the Profit or loss in his business.

 
 
 
 

32. மணிமேகலை Rs.25,52,500 க்கு ஒரு வீட்டை வாங்கி அதைச் சீரமைக்க Rs.2,28,350 செலவு செய்தார் . அவர் அவ்வீட்டை Rs.30,52,000 க்கு விற்றார் எனில் அவரது இலாபம் அல்லது நட்டம் காண்க .

Manimegalai purchased a house for Rs . 25,52,500 and spent Rs . 2,28,350 for its Repair . She sold it for Rs . 30,52,000 . Find her gain or loss .

 
 
 
 

33. ஒருவர் Rs.300 க்கும் 75 மாம்பழங்கள் வாங்கி அவற்றில் 50 மாம்பழங்களை Rs.300 க்கு விற்பனை செய்தார் . அனைத்து மாம்பழங்களும் விற்பனையான பின் அவரது இலாபம் அல்லது நட்டம் காண்க .

A man bought 75 Mangoes for Rs . 300 and sold 50 Mangoes for Rs . 300 . If he sold all the mangoes at the same price , find his profit or loss .

 
 
 
 

34. 25 கி.கி எடையுள்ள கோதுமைப்பை ஒன்று Rs.1550 க்கு விற்பனை செய்யப்பட்டு Rs.150 இலாபம் பெறப்படுகிறது எனில் கோதுமையின் அடக்க விலையைக் காண்க .

Heat is being sold at Rs. 1550 per bag of 25 kg at a profit of Rs. 150. Find the Cost price of the wheat bag.

 
 
 
 

35.

இரகு ஒரு நாற்காலியை Rs.3000 க்கு வாங்குகிறார் . அந்நாற்காலியின் விலையில் Rs.300 தள்ளுபடி செய்த பின் Rs.500 இலாபம் பெறுகிறார் எனில் அந்நாற்காலியின் குறித்த விலை என்ன ?

Raghu buys a chair for Rs . 3000. He wants to sell it at a profit of Rs . 500 after Making a discount of Rs . 300. what is the M.P. of the chair ?

 
 
 
 

36. சுகன் ஒரு ஜீன்ஸ் கால் சட்டையை Rs.750 க்கு வாங்கினார் . அது அவருக்குப் பொருந்தவில்லை . அதை அவருடைய நண்பருக்கு Rs.710 க்கு விற்பனை செய்தார் எனில் சுகனுக்கு இலாபம் அல்லது நட்டம் காண்க .

Sugan bought Jeans pant for Rs.750. It did not fit him. He sold it to his friend for Rs.710. Find the profit or loss to sugan .

 
 
 
 

37. வளவன் 24 முட்டைகளை Rs.96 க்கு வாங்கினார் . அவற்றில் 4 முட்டைகள் உடைந்து விட்டன . மீதியை விற்பனை செய்ததில் Rs.36 நட்டம் எனில் ஒரு முட்டைக்கான விற்பனை விலை எவ்வளவு ?

valavan bought 24 eggs for Rs . 96. Four of them were broken and also he had a loss of Rs . 36 on selling them.what is the selling price of one egg ?

 
 
 
 

38. தள்ளுபடியானது________லிருந்து கழிக்கப்பட்டு விற்பனை  விலை பெறப்படுகிறது .

Discount is subtracted from____ to get S.P.

 
 
 
 

39. நாதன் ஒரு கிராமத்து விற்பனையாளரிடமிருந்து Rs.800 க்கு 10 குடுவைகள் தேன் வாங்கினார் . அவற்றை ஒரு நகரத்தில் ஒரு குடுவை Rs.100 வீதம் விற்பனை செய்தார். அவருடைய இலாம் அல்லது நட்டம் காண்க .

Nathan paid Rs.800 and bought 10 bottles of honey from a village vendor . He sold them in A city for Rs.100 per bottle . Find his profit or loss.

 
 
 
 

40.

ஒரு வினாடி வினா போட்டியில் கார்முகிலன் மற்றும் கவிதா வழங்கிய சரியான விடைகளின் எண்ணிக்கையின் விகிதம் 10 : 11. அப்போட்டியில் அவர்கள் மொத்தமாக 84 புள்ளிகள் பெற்றனர் எனில், கவிதா பெற்ற புள்ளிகள் எத்தனை?
The number of correct answers given by Kaarmugilan and Kavitha in a quiz competition are in the ratio 10 : 11. If they had scored a total of 84 points in the competition, then how many points did Kavitha get?
 
 
 
 

 

YouTube Channel Click here
Telegram Group Join Now

Leave a Comment